பலாத்கார புகார் கூறி பின்னர் பல்டி அடித்த நாகர்கோவில் மாணவி!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பலாத்கார புகார் கூறிய மாணவி, திடீரென அதனை மாற்றிப் பேசியதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளது. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் அந்த பகுதியில் குடும்பம் குடும்பமாக தங்கி உள்ளனர்.
இதில், செண்பகராமன் புதூர் அருகே கட்டளைக்குளம் பகுதியில் தங்கியுள்ள மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், 14 வயது இளம்பெண் உள்ளார். அவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. செங்கல் சூளையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அந்த மாணவியின் பெற்றோர் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர், படிக்கும் பள்ளி மற்றும் பல இடங்களிலும் மகளை தேடினார்கள். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு 9 மணியளவில் அந்த மாணவி அழுதபடி, வீடு திரும்பியுள்ளார்.
இதனால் பதறிப்போன பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அதாவது, பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தன்னை கடத்தி பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அங்குள்ள குளத்தில் தள்ளிவிட்டு சென்றதாகவும் மாணவி கூறினார்.
இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் மாணவியை நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியிடமும், அவர் பலாத்காரப் புகார் கூறிய 3 இளைஞர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அந்த மாணவி திடீரென பல்டி அடித்ததாக கூறப்படுகிறது. அதாவது தன்னை மேற்கு வங்காள வாலிபர்கள் பலாத்காரம் செய்யவில்லை என்றும், தான் அவர்களுடன் சாதாரணமாக பேசிவிட்டு தாமதமாக வீடு திரும்பியதாகவும் கூறியுள்ளார். இதனால் போலீசார் அந்த இளைஞார்கள் 3 பேரையும் விடுவித்தனர்.
முதலில் பலாத்கார புகார் கூறிய மாணவி, பிறகு திடீரென்று அதை மறுத்ததற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications