ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமானது - நக்மா
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நக்மா சந்தித்துப் பேசினார்.
சென்னை: நடிகர் ரஜினியை சந்தித்து பேசியதற்கும், இன்று ஸ்டாலினை சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று நடிகை நக்மா கூறியுள்ளார்.
நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுசெயலாளருமான நக்மா இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, செயல் தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு முதன்முறையாக சந்தித்ததால் அவருக்கு வாழ்த்து கூறியதாகத் தெரிவித்தார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்ற நக்மா, நேற்று நடிகர் ரஜினியுடனான சந்திப்புக்கும் தற்போது ஸ்டாலின் உடனான சந்திப்புக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இல்லை என்றார்.
திமுக தலைவர், கருணாநிதி வைரவிழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா அல்லது ராகுல் காந்தி கண்டிப்பாக வருவார்கள் என்றார்.
நேற்று ரஜினியை திடீரென சந்தித்து பேசினார் நக்மா. அப்போது அவர், ரஜினி என் நண்பர். அவரை நட்பு ரீதியாக தான் சந்திக்க வந்தேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கூறினார். இந்த நிலையில் ஸ்டாலின் உடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications