நீ ஒருவன் தானழகு... அது ராகுல்காந்திக்கு ரஜினி பாட்டு பாடிய நக்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ராகுல்காந்திக்காக ரஜினி பாடலை பாடிய நக்மா- வீடியோ

  சென்னை: ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா பட பாடலான நீ நடந்தால் நடை அழகு பாடலை பாடிய நக்மா இது ராகுல்காந்திக்கான பாடல் என்று கூறியுள்ளார்.

  அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியான நடிகை நக்மா, 5 நாள் சுற்றுப் பயணமாகப் புதுச்சேரி வந்திருந்தார். திருக்கனூரை அடுத்து இருக்கும் சோரப்பட்டு என்ற கிராமத்தில் பெண்கள் மத்தியில் பேசிய நக்மா, தற்போது இருக்கும் மத்திய பாஜக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.

  Nagma sings Batcha movie songs for Rahul Gandhi

  நம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி பிரதமரானால்தான் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல விவகாரங்களுக்குத் தீர்வு கிடைக்கும். அதனால் அவர் பிரதமராவதற்கு நாம் பாடுபட வேண்டும் என்றார்.

  பேச்சுக்கு மத்தியில் அழகு... அழகு.. நீ நடந்தால் நடையழகு...நீ சிரித்தால் சிரிப்பழகு...நீ பேசும் தமிழ் அழகு... நீ ஒருவன் தானழகு... என்ற பாடலை பாடினார்.

  கொஞ்சும் தமிழில் நக்மா பாடியதைக் கேட்ட பெண் ஒருவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று குரலெழுப்பினர்.
  அது ரஜினிக்காக இல்ல ரஜினிக்காகப் பாடவில்லை. ராகுல் காந்திக்காகப் பாடினேன். அவர்தான் இப்போ நம்மளோட பாட்சா. அவரை கொண்டு வர நீங்கதான் உதவி செய்யணும் என்றார். ரஜினியுடன் ஜோடியாக நடித்த நக்மா, திடீரென்று ராகுல்காந்தியை பாட்சா என்று கூறியதை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  All India Mahila Congress leader Nagma has sung a song Batcha movie Nee nandanthal Nadaiyalagu for RagulGandhi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற