நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது..தேசதுரோக வழக்கும் ரத்து!- வீடியோ
சென்னை: நக்கீரன் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர். கோபால் இன்று கைது செய்யப்பட்டார். அவரது கைது அகில இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன் கோபால் கைதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவரைப் பார்க்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் போலீஸார் கைது செய்து அப்புறபப்படுத்தி விட்டனர்.
Oct 09, 2018, 5:24 pm IST
நக்கீரன் கோபாலுக்காக வாதாடி கைதான வைகோவும் விடுதலை
கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார் வைகோ
நக்கீரன் கோபால் விடுதலையைத் தொடர்ந்து வைகோவும் விடுவிப்பு
நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
போலீஸ் துணையோடு எச். ராஜா வலம் வந்ததை நாடே பார்த்தது - மு.க.ஸ்டாலின்
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறிய எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை - மு.க.ஸ்டாலின்
கோபாலை விடுவிக்காவிட்டால் மிக விபரீதமான விளைவுகளை இந்த அரசு சந்திக்கும் - ஸ்டாலின்
Oct 09, 2018, 1:18 pm IST
திருவல்லிக்கேணி கோசா மருத்துவமனைக்கு ஸ்டாலின் வருகை
ஸ்டாலினுடன் துரைமுருகன், அ. ராசா ஆகியோரும் வருகை
மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிப்பு
ஸ்டாலின் வருகையால் திமுகவினரும் மருத்துவமனைக்கு வெளியே குவிகின்றனர்
Oct 09, 2018, 1:18 pm IST
திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு ஸ்டாலின் வருகை
மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை காண ஸ்டாலின் வருகை
Oct 09, 2018, 1:12 pm IST
நக்கீரன் கோபாலை காண ஸ்டாலின் வருகை
Oct 09, 2018, 12:57 pm IST
காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் நக்கீரன் கோபால்
மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார் நக்கீரன் கோபால்
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம்
ஓமந்தூரார் வளாக அரசு மருத்துவமனைக்கு நக்கீரன் கோபால் அழைத்துச் செல்லப்படுகிறார்
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அல்லிக்குளம் வளாகம் கோர்ட்டில் கோபால் ஆஜர்படுத்தப்படுவார்
Oct 09, 2018, 12:05 pm IST
ஆளுநரை இதில் தொடர்புபடுத்தி பேசுவதே பெரிய சதி - பொன்.ராதாகிருஷ்ணன்
அரசு இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
நிர்மலா தேவி விவகாரம் வெளியே வந்தால் பலர் உள்ளே போவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்
Oct 09, 2018, 12:01 pm IST
நக்கீரன் கோபால் கைதானது எனக்கு தெரியாது - பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டி
பாஜகவை பற்றி பேசாமல் தமிழகத்தில் அரசியலே இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
பத்திரிக்கை சுதந்திரம் பற்றி திமுக பேச கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்
Oct 09, 2018, 12:00 pm IST
சர்வாதிகார செயல் இது - ஈவிகேஎஸ் இளங்கோவன்
நிர்மலா தேவி வழக்கு குறித்து எழுதினால் கைது செய்வதா - இளங்கோவன்
கோபால் கைது பேச்சுரிமை, எழுத்துரிமையை நசுக்கும் செயல் இது - இளங்கோவன்
தமிழக ஆளுநர் என்னமோ தமிழகத்தின் பேரரசர் போல நடந்து வருகிறார் - இளங்கோவன்
அனாவசியமாக பல பகுதிகளுக்கு செல்கிறார், ஆய்வு செய்கிறேன் என்கிறார் - இளங்கோவன்
Oct 09, 2018, 12:00 pm IST
நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மை நிலை வெளி வர வேண்டும் - இளங்கோவன்
ஒரு நபர் கமிஷன் போட்டார்கள்.. அது என்ன ஆனது என்றே தெரியவில்லை - இளங்கோவன்
ஆளுநர் மாளிகைக்கும், நிர்மலா தேவிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது - இளங்கோவன்
இதுகுறித்து மத்திய அரசு விசாரித்து தவறு நடந்திருந்தால் தவறு செய்தவரை உள்ளே தள்ள வேண்டும் - இளங்கோவன்
Oct 09, 2018, 12:00 pm IST
வைகோவின் கைதும் கண்டனத்துக்குரியது - இளங்கோவன்
ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும் - இளங்கோவன்
எஸ்வி.சேகர், எச். ராஜா மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை - இளங்கோவன்
Oct 09, 2018, 12:00 pm IST
நிர்மலா தேவி குறித்து பேசுவது என்ன தப்பு - இளங்கோவன்
ஆளுநர் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் அல்ல - இளங்கோவன்
தமிழகத்தில் ஜனநாயகத்தை மீறி அவர் செயல்பட முடியாது - இளங்கோவன்
அவர் அத்துமீறி செயல்பட்டால் தமிழக மக்கள் பொறுக்க மாட்டார்கள் - இளங்கோவன்
Oct 09, 2018, 11:47 am IST
தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை - ஸ்டாலின்
நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
சிந்தாதிரிப்பேட்டையில் மதிமுகவினரும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு
பத்திரிகையாளர்களும் திரண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்
#Flashnews : பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைதை கண்டித்தும், பார்க்க அனுமதிக்காத காவல் துறையினரின் அராஜக போக்கிற்காக திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோ அவர்கள் சிந்ததிரிபேட்டை காவல்துறை அலுவலகத்தின் வெளியே வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் #NakkheeranGopalpic.twitter.com/wfFc9hrUPA
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட ஊடகவியலாளர்கள்
நக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக போராட்டம்
READ MORE
11:46 AM, 9 Oct
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட ஊடகவியலாளர்கள்
நக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக போராட்டம்
11:46 AM, 9 Oct
தர்ணாப் போராட்டம் நடத்திய வைகோ கைது
11:47 AM, 9 Oct
வைகோ கைதைக் கண்டித்து மதிமுக தொண்டர்கள் போராட்டம்