For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் அரசு மருத்துவமனையில் நளினி திடீர் அனுமதி.. இருதயப் பிரச்சினை குறித்து பரிசோதனை

Google Oneindia Tamil News

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி இன்று வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயம் மற்றும் நரம்பியல் பிரச்சினை காரணமாக டாக்டர்கள் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.

வேலூர் மகளிர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 3 பேர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Nalini admitted in Vellore GH

சமீபத்தில் நளினியின் தந்தை காலமானார். இதையயடுத்து இறுதிச் சடங்குக்காக ஒரு முறையும், காரியத்திற்காக இன்னொரு முறையும் என இரண்டு முறை பரோலில் வந்திருந்தார் நளினி.

இந்த நிலையில் இன்று காலை வேலூர் அரசு மருத்துவமனைக்கு நளினி அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய சிகிச்சைப் பிரிவிலும், நரம்பியல் பிரிவிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.த

ஏற்கனவே இதே மருத்துவமனையில் பேரறிவாளன் சிறுநீரகத் தொற்றுப் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Nalini was admitted in Vellore GH after some ailment. She undergone some tests in the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X