சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.. நளினியின் தாயார் ஆனந்த கண்ணீர்!
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம்கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு நளினியின் தாயார் பத்மாவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சுப்ரீம்கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு நளினியின் தாயார் பத்மாவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மனு
இதைத்தொடர்நது 7 பேரையும் விடுதலை செய்ய பேவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

தமிழக அரசே முடிவு செய்யலாம்
இதைத்தொடர்ந்து 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.

அற்புதம்மாள் வரவேற்பு
மேலும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்புக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பத்மாவதி மகிழ்ச்சி
அதேபோல் நளினியின் தாயார் பத்மாவதியும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் உணர்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.
-
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications