"ஜெ ஜெயலலிதா என்னும் நான்"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா?... நமது அம்மா கேள்வி
ஜெயலலிதா என்ற ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா என நமது அம்மாவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா என்னும் நான்- இந்த ஒற்றைக் குரல் எழுந்து வந்து மீண்டும் ஒலிக்காது என்பதால்.... ரஜினி, கமல், தினகரன், இயக்குநர்களுக்கெல்லாம் தைரியம் வந்துவிட்டது என நமது அம்மாவில் கவிதை எழுதப்பட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள நமது அம்மா நாளிதழில் ஏக்கத்தில் தமிழகம் என்ற தலைப்பில் வெளியான கவிதை நடை பின்வருமாறு:

"ஜெ ஜெயலலிதா
என்னும் நான்"
இந்த
ஒற்றைக்குரல்
எழுந்துவந்து
மீண்டும்
ஒலிக்காது
என்பதால்...
நாட்டை விட்டே
வெளியேறுவேன்
என
ஊளையிட்ட
கோழைக்கும்
மையம்
தொடங்கும்
மனத் தைரியம்
வருகிறது...
உச்ச நட்சத்திர
நடிகருக்கும்
கட்சி
தொடங்கும்
உத்வேகம்
பிறக்கிறது...
அமீர்- பாலா
கரு.பழனியப்பன்-
கௌதமன்-
என்றெல்லாம்
பட வாய்ப்பு
இல்லாத
இயக்குநர்
எல்லாம்
தாடிவிட்டுக்
கொண்டுப
தமிழினப்
போராளி
வேஷம் கட்டும்
வேடிக்கை
பிறக்கிறது...
பாரதிராஜா
பார்த்திபன்
இப்படி
பழங்கால
இயக்குர்களும்
பத்து நாளுக்கு
ஒரு முறை
பத்திரிகையாளர்
சந்திப்புகள்
நடத்தி
பயாஸ்கோப்
காட்டும்
பரிதாபம்
நடக்கிறது...
எட்டு வழிச்
சாலை
போட்டால்...
எட்டு பேரை
வெட்டுவேன்
என்றெல்லாம்
எகத்தாளம்
பேசி
மிரட்டுகிற
மமதை
மன்சூர்
அலிகானுக்கும்
மண்டையில்
உதிக்கிறது...
ஒரு சேலை
இல்லாத
தைரியத்தில்
ஆலையை
மூடு
சாலையை
மூடு
என்றெல்லாம்
சமூக
ஆர்வலர்கள்
என்னும்
போர்வையில்
சவடால் பேசும்
சங்கதியும்
தொடர்கிறது...
பெண்ணினத்தை
இழிவாய்
பேசும் துணிச்சல் எஸ்வி சேகருக்கு...
டிராபிக்
ராமசாமி
என்னும் பேரில்
சினிமா
எடுக்கும் ஆசை
எஸ்.ஏ.சந்திரசேகருக்கு
இப்படி....
தாயே
நீங்கள் இல்லா
தமிழகத்தில்
தங்கப் பல்
கட்டிக் கொண்டவன்
உதிர்ப்பதெல்லாம்
பொன்மொழி
என்னும்
போக்கில்...
அது மட்டுமா
தமிழ்நாட்டு
எல்லைக்குள்
தலைகாட்டவும்
அஞ்சி நடுங்கி
பாண்டிச்சேரி
பக்கமா
பதுங்கிக்
கிடந்தவர்களுக்கும்
ஈரிலைச்
சின்னத்தை
எதிர்த்து
நிற்கிற
இறுமாப்பு
ஏகத்துக்கும்
எனும் போது...
வங்கத்து
கடலோரம்
துயில் கொண்ட
எங்கள்
தங்கத்து
தாரகையே...
இந்த
கோமாளிக்
கொட்டங்கள்
அடக்கவே
ஓர் நாள்
கோட்டைக்கு
வந்து போகக்
கூடாதா...
ஏக்கத்தில்
தமிழகம்...
என்று பாரபட்சம் இல்லாமல் ரஜினி, கமல், இயக்குநர்கள் அமீர், பாரதிராஜா, கரு பழனியப்பன், சீமான், டிராபிக் ராமசாமி, தினகரன், மன்சூர் அலிகான், வைகோ, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரை விமர்சித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications