ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி யாகம்... பயபக்தியுடன் பங்கேற்ற நாமக்கல் கலெக்டர்!
நாமக்கல்: ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று வேண்டி நடத்தப்பட்ட யாகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றது சர்ச்சை எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற தமிழகத்தில் பல்வேறு யாகங்களும், வித்தியாசமான நேர்த்திக்கடன்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்களில் மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

ஜெ.வுக்கான யாகங்களில் அரசு அதிகாரிகள்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய யாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

மதுரை ஆட்சியரின் பால்குடம்
அது போல மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரையில் ஜெயலலிதாவுக்காக நடைபெற்ற பால்குடத்தில் கலந்து கொண்டார்.

யாகத்தில் நாமக்கல் ஆட்சியர்
இந்நிலையில் சித்ரா பொளர்ணமியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லிமலை மன்மத ரதி கோயிலில் நடைபெற்ற யாகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டார்.

எம்.எல்.ஏ. கோவிலில் ஆட்சியர் வழிபாடு
சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி ராஜமாணிக்கத்தின் குலதெய்வமான இக்கோயிலில் ஜெயலலிதா மீண்டும் அரியணையில் அமர நடைபெற்ற இந்த யாகத்தில் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி பங்கேற்றார்.

பதவியை பறிக்க வேண்டும்!!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வழக்கிலிருந்து விடுதலை பெற்று மீண்டும், முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்று கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்கள், சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்களின் ஐ.ஏ.எஸ் பதவிளை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications