போதையில் பேருந்துக்கு அடியில் தூக்கம் – சக்கரம் ஏறி கூலித் தொழிலாளி பலி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குடித்துவிட்டு தனியார் பேருந்துக்கு அடியில் படுத்து உறங்கிய கூலித் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையச் சேர்ந்தவர் கேசவன் என்ற பீடி சுற்றும் கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்ததும் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சரக்கின் அளவு "ஓவராகிப்" போனதால் நிலை தடுமாறியதால் அவரால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.
இதன்காரணமாக அவர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மாற்றுப் பேருந்தின் அடியில் படுத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
போதையும் அதிகமாக இருந்ததால் எதுவுமே நினைவில் இல்லாமல் தூங்கியுள்ளார். இந்நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர், கேசவன் படுத்திருப்பதே தெரியாமல் அதிகாலை நான்கு மணியளவில் பேருந்தைக் கிளப்பி உள்ளார்.
அப்போது அடியில் படுத்திருந்த கேசவன் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாராயத்தினால் பரிதாபமாக இறந்து போன கேசவன், யாரெல்லாம் போதைக்கு அடிமையாகி குடும்பத்தினை தவிக்க விடுகின்றார்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications