ம.நடராஜன் மறைவு.. சின்னமாவுக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்: நாஞ்சில் சம்பத் இரங்கல்
சென்னை: ம.நடராஜன் மறைவை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் கணவரான ம.நடராஜன் நேற்று அதிகாலை சென்னை குளோபல் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் காலை 11 மணியளவில் தஞ்சை மாவட்டம் விளாரில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கணவர் நடராஜனின் மறைவை தொடர்ந்து பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா 15 நாள் பரோலில் வெளி வந்துள்ளார்.
விளார் அருளானந்த நகரில் வைக்கப்பட்டுள்ள நடராஜனின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தில் இனத்திற்கும் மொழிக்கும் கையெழுத்தாகி காலமெல்லாம் காவியம் செய்தவர் அண்ணன் ம. நடராஜன். தமிழீழக் கொள்கையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற சகலகலாவல்லவன் நடராஜன். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தின் உந்துவிசையாக இருந்தவர்.
இனத்திற்கும் மொழிக்கும் கையெழுத்தாகி காலமெல்லாம் காவியம் செய்தவர் அண்ணன் ம. நடராஜன். தமிழீழக் கொள்கையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற சகலகலாவல்லவன் நடராஜன். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தின் உந்துவிசையாக இருந்தவர்.(1/2) #NatarajanMaruthappa #condolences
— Nanjil Sampath (@NanjilPSampath) March 20, 2018
நாலாவது தமிழீழ போரில் மடிந்த மாவீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ராஜராஜசோழன் காலமாகிவிட்டார். அவரை இழந்துத் தவிக்கிற எங்கள் சின்னம்மாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்
நாலாவது தமிழீழ போரில் மடிந்த மாவீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ராஜராஜசோழன் காலமாகிவிட்டார். அவரை இழந்துத் தவிக்கிற எங்கள் சின்னம்மாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.(2/2) #Natarajan #NatarajanMaruthappa #condolences
— Nanjil Sampath (@NanjilPSampath) March 20, 2018
நடராஜனின் மறைவிற்கு நடராஜனை அறிந்தவர்களெல்லாம் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரால்
ஆளானவர்களெல்லாம் காணாமல் போனார்கள் . நடராஜனோடு சேர்ந்து நன்றி என்ற நாகரிகமும் செத்துப்போய்விட்டது. இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நடராஜனின் மறைவிற்கு நடராஜனை அறிந்தவர்களளெல்லாம் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரால்
— Nanjil Sampath (@NanjilPSampath) March 21, 2018
ஆளானவர்களெல்லாம் காணாமல் போனார்கள் . நடராஜனோடு சேர்ந்து நன்றி என்ற நாகரிகமும் செத்துப்போய்விட்டது. #RIPNatarajan #Natarajan @AIADMKOfficial #TnPolitics #TNGovernment
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications