ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்னும் போதையில்தான் இருக்கிறார்... நாஞ்சில் சம்பத் பொளேர்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் போதையில்தான் இருக்கிறார் என நாஞ்சில் சம்பத் கூறிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் போதையில்தான் இருக்கிறார் என நாஞ்சில் சம்பத் கூறிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தந்தை பெரியாரின் பேரன்தானா என்ற சந்தேகம் வருவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்தும் விடுவிக்கக்கோரியும் அதிமுக அம்மா அணியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த போராட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மவுனத்தை கலைக்க வேண்டும்
அவர் பேசியதாவது, மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு மவுனத்தைக் கலைக்க வேண்டும். கேரளாவைப் பின்பற்றி, மேற்கு வங்காளத்தைப் பின்பற்றி, மாட்டிறைச்சிக்கு மத்திய அரசாங்கம் விதித்த தடை தமிழகத்துக்குப் பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மத்திய அரசின் அயோக்கியத்தனம்
நோன்பு காலத்தில் சிறுபான்மை மக்களின் நெஞ்சத்தில் அச்சத்தை விதைக்கிற ஒரு அயோக்கியத்தனத்தை மத்திய அரசு செய்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

இன்னும் போதையில்தான் இருக்கிறார்..
மேலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தந்தை பெரியாரின் பேரன்தானா என்ற சந்தேகம் தனக்கு வருவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறினார். ஜெயலலிதா படத்தை சட்டசபையில் வைக்கக் கூடாது எனச் சொல்லும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்னும் போதையில்தான் இருக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ரஜினியால் பேராபத்..
ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். வைரவிழா கொண்டாடுகிற கலைஞர் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications