காங்கிரசும், பாஜகவும், கண்ணீரில் உப்பெடுக்கும் பாவிகள்.. நாஞ்சில் சம்பத் சீற்றம்
சென்னை: காங்கிரசையும், பாஜகவையும் பாவிகள் என வர்ணித்துள்ளார் அதிமுக செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத நிலையில், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக அரசை மோடி அரசு கைப்பற்ற முயலுவதாகவும், அதற்கு எதிராக, அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க ராகுல் காந்தி வந்ததாகவும், காங்கிரஸ் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறுகையில்,
"அரசு நிர்வாகத்தை, கண்காணிப்பதற்கும், கவனிப்பதற்கும் ஆளுநர் இருக்கிறார். ஆளுநரே அதனைத் தீர்மானிப்பார். தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் எப்படிப் போக வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவாக அறிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில், பொதுப்பணித் துறை மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரிடம் ஆளுநர் கருத்துக் கேட்டுள்ளார். விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது. சட்டம்-ஒழுங்கும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே, அரசு முடங்கிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றப் பேச்சு" என்று கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவர்களை வைத்து மோடி அரசு உளவு பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இது காங்கிரஸ் - பி.ஜே.பி. கட்சிகளுக்கு இடையிலான பனிப்போரின் வெளிப்பாடு. ராகுல் காந்தி வந்து முதல்வரை நலம் விசாரித்துச் சென்றதை அ.தி.மு.க. வரவேற்கிறது. ஆனால், இதிலும் அரசியல் செய்கிறவர்கள் 'கண்ணீரில் உப்பெடுக்கிற பாவிகள்' என்றே சொல்வேன்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications