அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது.. நாஞ்சில் சம்பத் பொளேர்
நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது என்று அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனை இன்று நேரில் சந்தித்து நாஞ்சில் சம்பத் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா, ஜெயக்குமாருக்கு எந்தப் பதவியும் அளிக்காமல் ஒதுக்கி வைத்திருந்தார் என்றும், அவருக்கு மீனவர்கள் செயலாளர் பதவியைக் கொடுத்தது சசிகலா என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் பொறுப்பை வாங்கிக் கொடுத்தவர் டிடிவி தினகரன் என்றும் நன்றி மறந்து நாகரிகம் கெட்டு ஜெயக்குமார் பேசுகிறப் பேச்சை அலட்சியப்படுத்துகிறார் தினகரன் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், விசுவாசம் இல்லாமல் தான்தோன்றித்தனமாக பேசும் அமைச்சர் ஜெயக்குமார் ஏதோ பயத்தில் உளறுகிறார் என்றும் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications