பேசவில்லை... பேசவில்லை... மன்னிச்சிங்குங்க... மன்னிச்சிங்குங்க... பதறியடித்த நாஞ்சில் சம்பத்
கொடைக்கானல்: கொடைக்கானலில் நடந்த அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக துணை கொ.ப.செ. நாஞ்சில் சம்பத், அரசியல் கலந்து பேசியதால அவருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதையடுத்து மன்னிச்சிக்குங்க என்று பதறிப் போய் கூறினார் சம்பத்.
கொடைக்கானல் லயன்ஸ் சங்கம் சார்பில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தந்தை என்ற பெயரில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அப்போது அவர் மொரார்ஜி தேசாய்தான் சிறந்த தந்தை என்று பேசினார். மொரார்ஜி வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்லி அவர் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்.

மும்பை முதல்வராக இருந்தபோது
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 1955 ல், மும்பை மாகாண முதல்வராக இருந்தார். அப்போது அவரது மகள், பள்ளி இறுதி வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.

பெயிலாகி விட்டேன் தந்தையே...
தந்தையைச் சந்தித்த மகள், அப்பா, நான் நன்றாக தேர்வு எழுதினேன். ஆனால், உங்கள் ஆட்சியில் உள்ள ஆசிரியர்கள் ஒழுங்காக தேர்வுத்தாளை திருத்தவில்லை; நான் பெயிலாகி விட்டேன். நீங்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம் சொல்லி, என்னை பாஸ் செய்ய வைக்க வேண்டும் என்றார்.

மறுத்தார் தந்தை.. தற்கொலை செய்த மகள்
ஆனால், மொரார்ஜி தேசாய் மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த அவரது மகள், தற்கொலை செய்து கொண்டார்.

பெருமைப்பட்ட மொரார்ஜி
இதுகுறித்து நிருபர்கள், உங்களது மகளின் தற்கொலைக்கு நீங்கள்தானே காரணம்? என, மொரார்ஜியிடம் கேட்டனர். மகள் இறந்தது எனக்கு மிகுந்த துக்கத்தை தந்துள்ளது. ஆனாலும், எனது நிர்வாகத்தில் மகளுக்காக நான், நிர்வாகத்தில் தலையிட மறுத்ததை நினைத்து பெருமைப் படுகிறேன் என்றார். அவர் தான் உண்மையில், இந்தியாவின் சிறந்த தந்தை.

ஆனால் தமிழகத்தில்...
ஆனால், தமிழகத்தில் என்ன நிலைமை? மகன்களுக்காக கட்சி நடத்தும் தந்தை ஒருவர் இருக்கிறார். அவர், மகளுக்காக எதையும் இழக்க தயாராக இருக்கிறார்.

அரசியல் பேசாதே...
சம்பத் இப்படிக் கூறியபோது கூட்டத்தில் இருந்தவர்கள், லயன்ஸ் சங்க கூட்டத்தில் அரசியல் பேசக் கூடாது, பேசாதே என்று கூறி சத்தம் போட்டனர்.

பேசவில்லை.. பேசவில்லை
உடனே சுதாரித்த சம்பத், பேசவில்லை, பேசவில்லை.. பேசியிருந்தா மன்னிச்சிங்குங்க என்று கூறி விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications