நாஞ்சில் சம்பத் மீதான இன்னொரு அவதூறு வழக்கும் வாபஸ்
Subscribe to Oneindia Tamil

அவர் அதிமுகவில் சேர்ந்த பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட பல வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இந்த நிலையில் மேலும் ஒரு அவதூறு வழக்கிலிருந்தும் சம்பத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடந்த மதிமுக கூட்டத்தில், அப்போது அந்த கட்சியில் இருந்த நாஞ்சில் சம்பத், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு புதுக்கோட்டை ஜே.எம். கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில் நாஞ்சில் சம்பத்தை அவதூறு வழக்கில் இருந்து நீதிபதிகள் விடுவித்து உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications