நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு
நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தினகரன் ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
சசிகலா, தினகரனின் தீவிர விசுவாசியான நாஞ்சில் சம்பத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை நேற்று இரவு பாஜகவினர் முற்றுகையிட்டனர்.

அத்துடன் நாஞ்சில் சம்பத் மீது பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத்தின் வழக்கறிஞர்கள் இன்று ஒரு மனு அளித்தனர். அதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூண்டுதல் பேரில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. ஆகையால் நாஞ்சில் சம்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குடியாத்தம் போலீசில் நாஞ்சில் சம்பத் மீது அதிமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசி வருவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications