தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது.. சொல்கிறார் முதல்வர் நாரயணசாமி
தமிழகத்தில் தனியாக வந்தாலும் கூட்டணியுடன் வந்தாலும் பாஜகவால் தலைதூக்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்று கூறினார்.

மேலும் தற்போதைய வரிவிதிப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. அரசியல் காழ்ப்புணர்சியால் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் தனியாக வந்தாலும் கூட்டணியுடன் வந்தாலும் பாஜகவால் தலைதூக்க முடியாது. ஜூன் 3-ல் கருணாநிதியின் வைர விழாவில் புதுச்சேரி முதல்வர் என்ற முறையில் பங்கேற்பன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications