ரஜினிகாந்தை விட எனக்கு தமிழ் உணர்வு அதிகம்...- 'ஆரம்பிச்சிட்டார்' நாசர்!
தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது என்று ஒரு வழக்குச் சொல் தமிழில் உள்ளது. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கும், அவர்களைவிட பெரிய அளவில் அரசியல் செய்யும் சினிமாக்காரர்களுக்கும் ரொம்பவே பொருந்தும்.
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும்போது ரஜினியின் ஆதரவுக்காக அவர் வீட்டுக்கும் கல்யாண மண்டபத்துக்கும் நடையாய் நடந்தவர்கள் நாசர் அன்ட் கோ.

இன்று அதே ரஜினிகாந்தை கிண்டலடிக்கும் விதமாகப் பேச ஆரம்பித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றி விடுங்கள் என ரஜினி கூறியது பற்றிய ஒரு கேள்விக்கு நாசர் அளித்த பதிலில், "இதை சென்ற நிர்வாகத்தினால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று பார்க்க வேண்டும்.சட்டச்சிக்கல் ஏதுமுண்டா என்று ஆராய வேண்டும். மாற்றினால் பிரச்சினைகள் எழுமா என்று அலச வேண்டும். முக்கியமாக இச் சங்கத்தின் அறுபதாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானத்தை பரபரப்பாக்கிய திரு.ரஜினிகாந்த் அவர்களை விட எனக்கு ஒரு சதவிகிதமாவது அதிக தமிழ் உணர்வு உண்டு. மெட்ராஸூக்கு ஒரே இரவில் சென்னை என்று சூட்டப்படவில்லை," என்று கூறியுள்ளார்.
"நடிகர் சங்கம் என்பது ஒரு சாதாரண சங்கம்... அவ்வளவுதானே. அதற்கு ஏன் இவ்வளவு பில்ட்அப் நாசர்?
ரஜினி ஏதோ நேற்று இதைச் சொல்லவில்லை. தேர்தல் நடந்த நாளன்று காலையிலேயே வாக்களித்துவிட்டு நடிகர் சங்கப் பெயரை மாற்றுமாறு கூறினார். அன்றைக்கு அதை வரவேற்பதாக உடனே பேட்டி கொடுத்துவிட்டு, இப்போது திடீரென தமிழுணர்வு பற்றியெல்லாம் பேசுவது, வெற்றி தந்த மிதப்பா?"
-சமூக வலைத் தளங்களில் ரஜினி ரசிகர்கள் இப்படி கேட்க ஆரம்பித்துள்ளனர். சிலர் இன்னும் சிலபடிகள் மேலே போய், நாசரை கடுமையாக விமர்சித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
எனிவே... நடிகர் சங்கத் தலைவர் நாசரின் ஆரம்பமே நல்லால்லையே!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications