நடராஜனின் உடல்நிலை தேறி வருகிறது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை : நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடராஜனுக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கல்லீரலும், சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக தெரியவந்தது.

இதனால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உறுப்பு தான மையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது உடல்நிலை மோசமாக இருந்து வருவதாக இரு முறை அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி நடராஜனுக்கு மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகளை தானமாகப் பெற்று கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் கூறுகையில், நடராஜனின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது.
அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடராஜனை பார்ப்பதற்காக அவரது மனைவி சசிகலா 5 நாள்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். அவர் இன்று மருத்துவமனைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications