மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவுடன் தொடர்பு வைத்திருந்தது சசிகலாதான்... நத்தம் விஸ்வநாதன் 'நச்'
மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவுடன் தொடர்பு வைத்திருந்தவர் சசிகலாதான் என நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தம்முடைய மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவுடன் தொடர்பு வைத்திருந்தது சசிகலா நடராஜன் தான் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நத்தம் விஸ்வநாதனும் ஆதரவு தெரிவித்துள்ளார். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் சக்திவாய்ந்த அமைச்சர்களாக வலம் வந்த ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், கேபிமுனுசாமி மூவரும் இப்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவுக்கு எதிராக கை கோர்த்துள்ளனர்.

சட்டசபையில் திமுக செயல் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பார்த்து ஓபிஎஸ் சிரித்த ஒரே காரணத்துக்காகவே அவர் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார் என சசிகலா கூறியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:
எங்களுக்கு திமுகவினர் யாருடனும் தொடர்பு கிடையாது. ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காமலேயே மிடாஸ் சாராய ஆலைக்காக திமுகவினருடன் தொடர்பு வைத்திருந்தவர் சசிகலாதான்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாமதமாக முடிவெடுத்தாலும் சரியான முடிவை எடுத்திருக்கிறார். மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் செல்வாக்கு யாருக்கு என்பதுதான் மிக முக்கியமானது.
இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications