தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 2 நாட்களில் ஆய்வு.. தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தகவல்
2 நாட்களில் ஆய்வு நடத்தப்படும் என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்களில் ஆய்வு நடத்தப்படும் என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைதலைவர் முருகன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர். தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டு 2000 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதோடு கோவையில் 60 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஆணையத்தின் சார்பில் நேரில் 2 நாள்களில் விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications