நண்பேண்டா.. கைவிடப்பட்ட காங்.குக்கு தோள் கொடுக்க ஓடி வந்த தேசியவாத காங்...!
சென்னை: தமிழகத்தில் தனித்து விடப்பட்ட கட்சி என்று இனி யாரும் காங்கிரஸைக் குற்றம் சாட்ட முடியாது. காரணம், அக்கட்சிக்கும் ஒரு கூட்டாளி கிடைத்து விட்டது.. அதுதான் தேசியவாத காங்கிரஸ்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருந்தது. ஆனால், காங்கிரஸையே திமுக உதறி விட்ட நிலையில் தேசியவாத காங்கிரஸைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா..
இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில், ராமதாதபுரம் தொகுதியில், அதன் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் ராஜேஸ்வரன் தனியாக போட்டியிட முடிவு செய்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு திருநாவுக்கரசர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸ் தரப்பில், தேசியவாத காங்கிரஸிடம் ஆதரவு கோரியதாக தெரிகிறது.
இதனையடுத்து, தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் கூடி இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். முடிவில் தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதிரிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
முறைப்படி தங்களது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவி்க்க, சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையமான சத்திய மூர்த்திபவனுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் ராஜேஸ்வரன், மற்றும் தமிழ்நாடு இளைஞரணி மாநில தலைவர் செந்தில் குமார் வாண்டையார் ஆகியோர் தலைமையில் சென்று தங்களது முடிவைத் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளதாலும், மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில், அதன் தலைவர் சரத்பவார் அமைச்சராக நீடிப்பதாலும், அந்த அடிப்படையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளதாம்.
எப்படியோ கைவிடப்பட்ட கட்சி என்ற அவப் பெயரிலிருந்து ஜஸ்ட் மிஸ் ஆகியுள்ளது காங்கிரஸ்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications