லாஜிக் இருக்கா சார்? உங்களுக்கு தெரியாம எப்படி? கடுகடுத்த குஷ்பு! கலங்கிய கள்ளக்குறிச்சி போலீஸார்
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு எளிதில் கிடைக்கிறது என்றால் இது போலீஸுக்கு தெரியாமலா இருக்கும் என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சரமாரியாக கேள்விகள் கேட்டார். இதற்கு பதிலளிக்க முடியாமல் காவலர்கள் திணறினர்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இந்த சாராயத்தில் அதிகளவு மெத்தனாலாக உருமாறி விஷச்சாராயமாக மாறிவிட்டது.

இதனால் பலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, கண் எரிச்சல், பார்வை மங்குதல், காது அடைத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து 128 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனைகளிலும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், இதுவரை 61 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் சிலர் அபாய கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும், துறை அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என கோரி பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் இறந்த 61 பேரில் 4 பேர் பெண்கள். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான விவகாரத்தை ஊடகங்களின் வாயிலாக வந்த செய்திகளை வைத்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரிக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு குஷ்பு உள்ளிட்டோர் சென்றனர். அங்கிருந்த போலீஸாரை சரமாரி கேள்விகளால் துளைத்தனர்.
குஷ்பு பேசுகையில் "சார் அந்த பொண்ணுக்கு 20 வயசுதான், குழந்தை இருக்கிறது, ஆனால் அவருடைய கணவர் இறந்துவிட்டார். இன்னொரு பெண் 2 மாத கர்ப்பிணி, ஏற்கெனவே 6 வயதில் குழந்தை இருக்கிறது. அவருடைய கணவரும் இறந்துவிட்டார். இந்த கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் கூலி தொழிலாளர்கள்.
இவர்கள்தான் கூலி வேலை செய்து தினமும் குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். தற்போது அவர்கள் இல்லாததால் குடும்பத்தினர் நிற்கதியாய் நிற்கிறார்கள். கூலித் தொழில் செய்யும் 130 பேருக்கு கள்ளச்சாராயம் எளிதாக கிடைக்கிறது என்றால், போலீஸுக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும் ? என்ன சார் உங்களுக்கு தெரியவே தெரியாதுனு சொல்றீங்க, என்ன லாஜிக் இருக்கிறது என கேட்டார்.
அதற்கு போலீஸார் , கள்ளச்சாராய வழக்கில் அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம் என்றார். அதற்கு குஷ்பு, கைது செய்தால் அவர்களுக்கு யாராவது உதவி செய்து ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். ஒருவர் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்கிறார்கள். அவர்கள் திருந்தும் அளவுக்கு தண்டனையே கிடைப்பதில்லை என வருந்தினார். காவல் நிலையத்திற்கு சென்றதிலிருந்தே குஷ்பு முகத்தை கடுகடுவென வைத்திருந்தார். போலீஸாரிடம் பேசும் போது கண்களில் கோபத்துடனேயே பேசினார்.












Click it and Unblock the Notifications