நெல்லை அருகே கணவன், மனைவி தற்கொலை: 2 பெண் குழந்தைகள் ஆபத்தான நிலையில் மீட்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: குடும்ப பிரச்னையில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இரண்டு பெண் குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Near in Nellai A husband and wife commit suicide

நெல்லை மாவட்டம், ஊத்துமலையை அடுத்துள்ள கடங்கநேரியை சேர்ந்தவர் அகிலபிரகாஷ் 31.

இவரது மனைவி உமா 28. இவர்களுக்கு 3 வயதில் இலியானா என்ற மகளும், கீர்த்தி என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. நேற்று இரவில் வீடு பூட்டப்பட்டிருந்தது. குழந்தைகள் அழும் குரல் கேட்டு பக்கத்துவீட்டுக்காரர்கள் கதவை திறந்தபோது கணவனும் மனைவியும் இறந்துகிடந்தனர்.

அவர்கள் விஷம் அருந்தியதோடு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர். எனவே இரவில் குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட உமா எட்டு மாத கர்ப்பிணி ஆவார்.

கர்ப்பிணி மனைவியும் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near in Nellai A husband and wife commit suicide. Two female babies rescude in critical condition.
Please Wait while comments are loading...