சேலம் அருகில் கள்ளச்சாரயம் குடித்த விசைத்தறி தொழிலாளி பலி! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் காளரம்பட்டியில் பக்கத்து வீட்டில் விற்ற மதுவை வாங்கிக் குடித்தவர் மரணமடைந்ததால் அங்கு சோகம் நிலவி வருகிறது.

சேலம் மாவட்டம் களரம்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜூ. அவர் விசைத்தறி நெசவாளியாக வேலை பார்த்தார். சம்பவத்தன்று வரதராஜூ, தன் தெருவில் மது விற்பனை செய்யும் அழகேசன் என்பவரது வீட்டுக்குச் சென்று மது வாங்கிக் குடித்துள்ளார்.

 Near Salem a weaver died after drinking liquor

அதன்பின்பு வீட்டுக்கு வந்த வரதராஜூ சில நிமிடங்களிலேயே இறந்தார். அதனையடுத்து, அழகேசன் விற்ற மதுவால்தான் வரதராஜூ இறந்தார் எனக் கூறி பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், போலீசார் இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுவால் உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Salem Kalarampatti Varadharaju, a weaver drank liquor which sold his neighbor house and he died after drinking it.
Please Wait while comments are loading...