கலப்பு திருமணம் செய்த மகன்.. ஒதுக்கி வைத்த ஊர்.. தற்கொலை செய்து கொண்ட குடும்பம்!
உடுமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருப்பூர்: உடுமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரை சேர்ந்தவர் சி.டி.முருகன். 55 வயதான இவர் எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் பானுபிரியா என்ற மகளும் உள்ளனர். பானுபிரியா பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார்.

குடும்பத்துடன் தற்கொலை
இந்த நிலையில் இன்று மதியம் 3 பேரும் உடுமலை ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பின் பகுதியில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை டி.எஸ்.பி. விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

மகன் கலப்பு திருமணம்
மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் மகன் அண்மையில் வேறு சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை கலப்பு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஒதுக்கி வைத்த கிராம மக்கள்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஊர் பொதுமக்கள் முருகன் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முருகன் தனது குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

போலீசார் விசாரணை
மகன் கலப்பு திருமணம் செய்ததால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வழகுப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications