For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளி.. தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி பலி

வேலூர் அருகே கடந்த 24ஆம் தேதி அதிகாலையில் வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளியால் தீக்காயமடைந்த பெண் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

வேலுர்: வானியம்பாடி அருகே கடந்த 21அம் தேதி அதிகாலையில் வீடு ஒன்றின் மீது பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம ஒளி விழுந்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வானியம்பாடியை அடுத்த துருங்கி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி ஓட்டுநரான இவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் 24ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் மர்ம ஒளி ஒன்று விழுந்தது.

Near Vaniyambadi a mysterious light fell with terrible noise on a home in this a lady died today

இதில் வீட்டின் மேற்கூறை நொறுங்கி தூள் தூளானது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசனின் மனைவி புவனேஷ்வரி பலத்த தீக்காயம் அடைந்தார்.

பலத்த சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் வீடு முற்றிலும் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பலத்த தீக்காயத்துடன் போராடிய புவனேஷ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்றுவந்த புவனேஷ்வரி இன்று சிகிச்சைப்பலனின்றி உயிரழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எரிகல் ஒன்று விழுந்ததில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Near Vaniyambadi a mysterious light fell with terrible noise on a home on 24th of last week. In this accident a lady who was getting treatment died today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X