நெடுவாசலில் 19-வது நாளாக தொடரும் போராட்டம்! பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஆட்சியர் அழைப்பு!
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் 19-வது நாளாக போராட்டம் தொடருகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 19-வது நாளாக இன்று திங்கள்கிழமையும் போராட்டம் தொடருகிறது. இந்த போராட்டத்தைக் கைவிடும் பேச்சுவார்த்தையை மாவட்ட ஆட்சியர் கணேஷ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், கோட்டைக்காடு, வடகாடு உள்ளிட்ட பல கிராமங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கோட்டைக்காடு கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் நெடுவாசலில் 19-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. வடகாடு கிராம மக்கள், மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நெடுவாசல் போராட்டக் குழுவை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நேற்றும் மாவட்ட ஆட்சியர் கணேஷ் அழைப்பு விடுத்தார். ஆனால் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உறுதி மொழி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட முடியும் என்பதில் நெடுவாசல் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இதனால் நெடுவாசல் போராட்டம் அவ்வளவு எளிதாக ஓயாது என்றே தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications