மோடி-சிறிசேன சந்திப்புக்குப் பின்னும் மீனவர்கள் மீது தாக்குதல்- நிரந்தர பாதுகாப்பு தேவை: கருணாநிதி
சென்னை: தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி: முதலமைச்சராக பன்னீர்செல்வம் நடத்தும் ஆட்சியில், ஜெயலலிதாவின் அறிவிப்புகள் காற்றில் பறப்பதாகவும், கோவில் ஊழியர்கள் அது குறித்து வேதனை அடைந்திருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறதே?

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, 110வது விதியின் பெயரால் 12-8-2014 அன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா படித்த அறிக்கையில் தான், "தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் கோவில்களில் பணிபுரியும் 8 ஆயிரத்து 184 பணியாளர்களுக்கு தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களது பணி வரன்முறை செய்யப்படும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 44 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" என்று தெரிவித்து, ஐந்து மாதங்கள் உருண்டோடி விட்டன.
ஜெயலலிதாவின் அறிவிப்பு என்னவாயிற்று? 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட அந்த ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதா? அவர்களது பணி வரன்முறை செய்யப்பட்டு விட்டதா? அதைக் கேட்டுத்தான் அந்தக் கோவில் ஊழியர்கள் தற்போது போராடுகிறார்கள்.
ராணிப்பேட்டை விபத்து
கேள்வி: ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டு பத்து பேர் இறந்ததற்கு அரசின் அலட்சியம்தான் காரணம் என்று செய்தி வந்திருக்கிறதே?
இந்த விபத்து பற்றி 1-2-2015 அன்றே நான் விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். இந்த விபத்து குறித்து மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து "உண்மை கண்டறியும்" முயற்சியிலே ஈடுபட்டார்கள்.
அதிகாரிகள் அலட்சியம்
அந்தக் குழுவின் தலைவர் கூறும்போது, "வாரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் கழிவுநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, விரிசல் இருந்தும் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். அதில் சுத்திகரித்த திடக் கழிவுகளைத்தான் சேமிக்க வேண்டும்.
சுத்திகரிக்காமல் திரவக் கழிவுகளைத் தொடர்ந்து சேமித்ததால் விபத்து நடந்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தொழிலாளர் நல ஆணையமும் செயல்படவில்லை. எனவே தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்த அரசுத் துறைகள்தான் பலிக்குக் காரணம்" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
மீனவர்கள் மீது தாக்குதல்
கேள்வி: ஒரே நாளில் இரண்டு இடங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகச் செய்தி வந்திருக்கிறதே?
"மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை" என்பார்கள்! இலங்கை அதிபர் சிறிசேனா, டெல்லி வந்து நம்முடைய பிரதமருடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கிறார்.
நிரந்தர பாதுகாப்பு
மோடி-சிறிசேனா பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஆகியவற்றுக்குப் பிறகு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் இருக்காது என்று நம்பியதற்கு மாறாக இந்த இரண்டு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக இதிலே கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களுக்கு ஒரு நிரந்தரப் பாதுகாப்பினை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications