மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அவசியம் வேண்டும் - அடம்பிடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு அவசியம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் மெய்தேடும் பயணம் என்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு அவசியம் வேண்டும் எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,

இந்தி திணிப்பு என்பது முடிந்து போன விஷயம். திமுகவின் இந்தி எதிர்ப்பு என்பது ஆட்சியை கைப்பற்றத்தான் நடைபெற்றது. அது திமுக வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தது. திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் சாமானிய தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். மைல்கற்களில் இந்தி திணிப்பு பற்றி நான் பேசவில்லை. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு தேவையில்லை என்று கூறினார். மேலும் இந்தி கற்பதில் என்ன தவறு? இருக்கிறது என்றும் திமுக தலைவர் குடும்பத்தில் யாருக்கு இந்தி தெரியாது? என்றும் கேள்வி எழுப்பினார்.
கிராமப்புற மாணவர்களுக்காக மட்டுமே நீட்டை புறக்கணிக்க கூடாது என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், 7,8-ம் வகுப்பில் இருந்தே நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யனும் என்றும் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு அவசியம் வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications