நீட் தோல்வி: விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீட் தோல்வி..மாணவி தற்கொலை முயற்சி..மாணவர் தற்கொலை- வீடியோ
விழுப்புரம்; நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். அதனால் சுமார் 1 லட்சம் மாணவர்களின் மருத்துவ படிப்பு பாழானது.

தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரத்தில் பிரதீபா, டெல்லியில் பிரணவ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications