For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணசாமியின் உடலை பார்த்து கதறி அழுத மகன்.. மருத்துவமனையில் சோகம்

நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வால் அப்பாவை இழந்த கஸ்தூரி மகாலிங்கம்-வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம், மருத்துவமனையில் தனது அப்பாவின் உடலை பார்த்துவிட்டு கதறி அழுது இருக்கிறார்.

    இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

    NEET Murder: Krishnasamis son comes out of exam hall, Police takes him to the hospital

    இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் தற்போது தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அந்த மாணவன் வெளியே வந்ததும் போலீஸ் அவனை சூழ்ந்து கொண்டது. அவனிடம் யாரும் பேச முடியாத வகையில் பார்த்துக் கொண்டது. பின் அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றியது.

    கிருஷ்ணசாமியின் மரண செய்தியை போலீஸ் முதலில் அந்த மாணவன் கஸ்தூரியிடம் சொல்லவில்லை. பின் அந்த மாணவன் தொடர்ந்து கேள்விகள் கேட்டதை அடுத்து போலீஸ் அவனிடம் விஷயத்தை தெரிவித்துள்ளனர்.

    தற்போது போலீஸ், அந்த மாணவனை, கிருஷ்ணசாமி உடல் இருக்கும் மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம், மருத்துவமனையில் கிருஷ்ணசாமியின் உடலை பார்த்துவிட்டு கதறி அழுது இருக்கிறார்.

    அங்கே உறவினர்கள் யாரும் இல்லாததால், கஸ்தூரி மட்டும் தனியாக அங்கே இருப்பதாக கூறப்படுகிறது. நீட் எழுத சென்ற மற்ற சில மாணவர்களின் பெற்றோர்கள் அவனுடன் ஆறுதலாக இருக்கின்றனர்.

    English summary
    NEET Murder: Dad dies after long travel to Kerala, Son writes Exam without knowing the information. Krishnasami's son comes out of exam hall, Police takes him to the hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X