சீட் கிடைக்காமல் ரயிலில் நின்று கொண்டே பயணித்த கிருஷ்ணசாமி.. எமனாகிப் போன நீட்!
நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமியின் மரணம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவர் நேற்று இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அனிதா உயிரை பலி வாங்கிய அதே நீட் தற்போது இன்னொரு உயிரையும் பலி வாங்கியுள்ளது. இந்த முறை தந்தை ஒருவரின் உயிரை பலி எடுத்திருக்கிறது மத்திய அரசின் இந்த நீட். நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனுடன் கேரளாவின் எர்ணாகுளம் சென்றவர், மகனை தேர்வு அறைக்கு அனுப்பிவிட்டு, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இரவு முழுக்க பயணம் செய்து, மகனுடன் காலையில் தூங்காமல், தேர்வு அறையை கண்டுபிடித்த அலைச்சலில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இவர்களுக்கு கடைசி நேரத்தில் வேறு மாநிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக அவசரம் அவசரமாக கேரளா செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் இவர்களுக்கு தட்கலில் கூட டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் பணமும் இல்லாமல், ரயிலில் முன்பதிவு செய்யாமல், சாதராண பெட்டியில் பயணித்து இருக்கிறார்கள் கிருஷ்ணசாமியும், அவரது மகனும்.
நேற்று முழுக்க இவர் தூங்காமல் நின்று கொண்டே பயணித்து இருக்கிறார். இதனால் இவரது உடல்நிலை மோசமாகி உள்ளது. இதன் காரணமாகவே இவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும் அலைச்சலும், மன உளைச்சலுமே இவரது மரணத்திற்கு காரணம் என்பது தெள்ள தெளிவாக தெரிந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications