நீட் தேர்வு குளறுபடி அடுத்த தேர்தலில் எதிரொலிக்குமா? 'ஒன்இந்தியா தமிழ்' வாசகர்கள் சொல்வதை பாருங்க
மக்களின் மனநிலை இப்படித்தான் உள்ளது என்பது புரிந்து விட்டது. எனவே அதற்கு ஏற்ப நடந்த குளறுபடிகளை திருத்திக் கொண்டு சரியான பாதையில் செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும், ஆட்சியாளர்கள் கைகளில்தான் உள்ளது.
Recommended Video

சென்னை: நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளின் கோபம் அடுத்த தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு அதிகம் வாசகர்கள் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று வாக்கலித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் பெரும் குளறுபடிகள் அரங்கேற்றப்பட்டு தமிழக மாணவ, மாணவிகள் அலைக்கழிக்கப்பட்டனர். ஒரு மாணவன் மற்றும் இரு மாணவிகளின் தந்தைகள் என மொத்தம் 3 பேரை காவு வாங்கியது நீட் தேர்வு.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் தொடர்ச்சியாக சட்டசபை தேர்தல் போன்றவை நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வால் மாணவர்கள், அவர்கள் பெற்றோர், உறவினர்கள் பட்ட அவஸ்தைகள் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி அனைத்து மட்டத்திலும் எழுந்தது.

அதிக வாசகர்கள்
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் ஒரு வாக்கெடுப்பை நமது வெப்சைட்டில் நடத்தியிருந்தோம். அதில் நிச்சயம் எதிரொலிக்கும் என்ற ஆப்ஷனுக்கு ஆதரவாக 41.98 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம், பெரும்பான்மை மக்களிடம் நீட் குளறுபடி பற்றிய கோபம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படியும் கருத்து உள்ளது
அதெல்லாம் எதிரொலிக்காது என்று 7.84 சதவீத வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எதிரொலிக்காது என்பதன் அர்த்தம் குளறுபடி இல்லை என்பதா அல்லது வேறு பல காரணிகளா என்பதும் ஆய்வுக்குறியது. இருப்பினும் கொடுத்த ஆப்ஷன்களிலேயே இதற்குத்தான் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன.

திருப்பிவிடுவார்கள்
ஒட்டுமொத்தமாக எதிர்ப்பை காட்டுவார்கள் மக்கள், என்ற ஆப்ஷனுக்கு 12.71 சதவீதம் பேரும், தேர்தல் வருவதற்குள் மக்களை திசை திருப்பி விடுவார்கள் என்ற ஆப்ஷனுக்கு 18.89 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம், மக்களை திசை திருப்புவார்கள் என்ற சந்தேகம் அதிகப்படியான வாசகர்களுக்கு இருப்பது தெளிவாகிறது.

திருத்துவார்களா
மக்களின் மனநிலை இப்படித்தான் உள்ளது என்பது புரிந்து விட்டது. எனவே அதற்கு ஏற்ப நடந்த குளறுபடிகளை திருத்திக் கொண்டு சரியான பாதையில் செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும், ஆட்சியாளர்கள் கைகளில்தான் உள்ளது. இனியாவது மாறுமா இந்த அவலம்?












Click it and Unblock the Notifications