கந்துவட்டியால் பறிபோன உயிர்கள். நடவடிக்கை எடுக்காத நெல்லை ஆட்சியரை கண்டித்து போராட்டம்
கந்துவட்டி கொடுமையால் 3 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டனர்.
Recommended Video

நெல்லை: கந்துவட்டி கொடுமையால் 3 உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டனர்.
கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்ற கூலி தொழிலாளி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் நேற்று தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடி பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களை பதற வைத்தது.

இந்த விபத்தில் அவரது மனைவி சுப்புலட்சுமி, 2 வயது குழந்தை அட்சய ப்ரணீதா, மற்றும் 5 வயது குழந்தை மதி சரண்யா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இசக்கி முத்த சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையல் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியர், காவல்துறைக்கு எதிராகவும், கந்து வட்டியை தடுக்கக்கோரியும் முழக்கமிட்டனர்.
இதில் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
முன்னதாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழ் அமைப்பினர் போராட்டத்துக்குப் பின்பும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications