நெல்லையில் கல்லூரி மாணவர்களுக்குள் கத்துகுத்து- போதை மருந்து விவகாரமா என விசாரணை
நெல்லை: கடையம் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு கத்திகுத்து விழுந்தது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள புதுகிராமத்தில் ஒரு வீட்டில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அர்ஷாத், தென்மலை தடக்கின் புத்தன் தெருவை சேர்ந்த ரிஜோ இவர்கள் உள்பட 5 பேர் அங்க தங்கியிருந்து தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர்.

இந்த மவாணவர்களுக்கு கடையம் அருகே செட்டிகுலம் பகுதியை சேர்ந்த சுந்தராஜன் என்பவர் அறிமுகம் ஆனார். இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் சுந்தராஜன் புதுக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் வீட்டுக்கு சென்று பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போன் மற்றும் பர்சை திருடி கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் சுந்தராஜனை ஓடி சென்று பிடிக்க முயன்றபோது அவர் அவர்களை கத்தியால் குத்தியாக கூறப்படுகிறது. இந்த கத்தி குத்தில் அர்ஷாத், ரிஜோ ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது. இதை பார்த்த மற்ற மாணவர்களும் சேர்ந்து சுந்தராஜனை பிடிக்க முயன்றதால் அவர் அந்த வழியாக வந்த பைக்கில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரையும் மீ்ட்டு தென்காசி மருத்துவமனயில் சேர்ந்தனர். அIங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர்கள் பாளைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுந்தராஜன் தப்பி செல்லும் போது ஒரு பையை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பையில் ஒரு கத்தி மற்றும் போதை மாத்திரைகள் இருந்தன. இதனால் போதை மருந்து விவகாரத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications