பிளஸ் 2 முடிவுகள்: நெல்லையில் 94.60 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
நெல்லை: நெல்லை மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 94.37 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு வெளியிட்டார். நெல்லை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 303 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதில் 33 ஆயிரத்து 317 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 13 ஆயிரத்து 536 பேர் மாணவர்கள். 19 ஆயிரத்து 781 பேர் மாணவிகள்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் இணைந்த நெல்லை கல்வி மாவட்டத்தில் 12795 பேர் தேர்வு எழுதினர். இதில் 12181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.60 ஆகும். சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 11151 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 10489 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.98 ஆகும். தென்காசி கல்வி மாவட்டத்தில் 11357 பேர் தேர்வை எதிர்கொண்டனர். இதில் 10647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.62 ஆகும்.
நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களில் நெல்லை கல்வி மாவட்டம் தான் 94.60 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஓட்டு மொத்தமாக மாவட்டத்தில் மாணவர்கள் 92.14 சதவீதம் பேரும், மாணவிகள் 95.97 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்.


Click it and Unblock the Notifications
