Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார்த்தைக்கு பின்னாடி 'ல' போடுவதல்ல நெல்லை தமிழ்.. இன்னும் இருக்கு மேட்டரு #தாய்மொழிதினம்

நெல்லை தமிழ் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் அந்த வட்டாரத்தில் வாழ்ந்து பழகியிருக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையான தமிழ் பேசப்படுவதை அப்போது அறியலாம்.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: இன்று உலக தாய்மொழி தினம் மொழி மீது பற்றுள்ள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர்களுக்கு மொழி என்பது தங்கள் உயிருக்கு நேர். உயிருக்கே ஆபத்து ஏற்பட்டால் கூட தாங்கிக்கொள்வர், மொழிக்கும், தங்கள் பண்பாடு, கலாசாரத்திற்கும் இழுக்கு ஏற்பட்டால் பொறுக்க மாட்டார்கள் என்பதே, தமிழர்கள் குறித்த பிற மாநில மக்களின் பார்வை.

தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று முழங்கியவர் பாரதிதாசன். இப்படியெல்லாம் தாய் மொழியை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது தமிழர் பண்பாடு.

வட்டாரத்திற்கு ஒரு உச்சரிப்பு

வட்டாரத்திற்கு ஒரு உச்சரிப்பு

இப்படிப்பட்ட தமிழ் எழுத்தாக மாறும்போது ஏறத்தாழ எல்லோருக்கும் ஒரே போன்ற பொருளை தருகிறது. ஆனால், வட்டாரத்திற்கு ஏற்ப வாயில் வகை தொகை இல்லாமலும் புழங்குகிறது. குமரியில் ரயில் ஏறி சென்னை வந்து சேருவதற்குள் ஒரே தமிழை ஓராயிரம் புது வார்த்தைகளில் கேட்டு மகிழலாம். நாஞ்சில் தமிழ், நெல்லை தமிழ், மதுரை தமிழ், கொங்கு தமிழ் மட்டுமில்லால் மெட்ராஸ் தமிழும் இந்த தமிழ்கூறும் நல்லுலகிற்கு புதிது கிடையாது.

நெல்லைக்கு தனிச் சிறப்பு

நெல்லைக்கு தனிச் சிறப்பு

இன்னமும் நிறைய ஒரிஜினல் தமிழ் சொற்கள் புழக்கத்தில் உள்ள வட்டார மொழி என்றால் அது, நெல்லை வட்டார தமிழ்தான். ச்சோறு, ச்சட்டை.. என ச் சேர்த்து புழங்கும் வார்த்தைகளை கேட்பதில் அலாதி சுகம் உண்டு. இந்த ச் சேர்த்தல் என்பதே சரியான உச்சரிப்பு என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள். நாகரீகம் என நாமாக கருதி பிற வட்டாரங்களில் ச் அழுத்தி கூறப்படுவதில்லை. நெல்லை வட்டாரத்திலுமே கூட வேண்டி விரும்பி 'ச்' என்ற அழுத்தத்தை இப்போதெல்லாம் குறைக்க ஆரம்பித்துள்ளனர் இளசுகள்.

வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை

நெல்லை மற்றும் அதன் சகோதர மாவட்டமான தூத்துக்குடி முழுக்க ஒரே மாதிரி தமிழ்தான் பேசுவார்களோ என யாராவது நினைத்தாலும் அது பெரும் பிழை. தென்காசி தமிழுக்கும், திசையன்விளை தமிழுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கும். 'யே அவன் அப்படி சொல்லுதாம்ல' என்று நாங்குநேரி பக்கம் பேசும் வார்த்தை திருச்செந்தூர் பக்கம், 'சொல்லுறான்ல' என மாறும். இதை வைத்தே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் எந்த வட்டாரத்துக்காரர் என்பதை புரிந்து கொள்ள முடியும். சில நேரங்களில் இந்த பேச்சை வைத்து ஜாதியை கண்டுபிடிக்கும் சமர்த்தர்களும் உண்டு. "பேசும்போது காது ஆடுது, அவன் நம்மாள்லே" என சொல்லும் பெருமாள் பிச்சை வகையறாக்கள் அவர்கள்.

விவரம் இல்லாத இயக்குநர்கள்

விவரம் இல்லாத இயக்குநர்கள்

நெல்லை தமிழ் என்றால் வெறும் 'ல' என்ற வார்த்தையை கடைசியில் சேர்ப்பது என்ற தப்பான கால்குலேசன் பலரிடம் உள்ளது. 'ஒஸ்தி' போன்ற திரைப்படங்களை இயக்கிய, களமறியாத இயக்குநர்கள் ஏற்படுத்திய மாயை இது. நெல்லை தமிழின் பல நுணுக்கங்கள், மண்ணின் மைந்தர்களுக்கே தெரியும். அதன் அர்த்தம் புரியும். திரைப்படங்களில் நெல்லை தமிழை அட்சர சுத்தமாக தப்பில்லாமல் பயன்படுத்தும் இயக்குநர்களில் முதலிடம் ஹரிக்குத்தான். அவர் தூத்துக்குடி மாவட்ட மண்ணின் மகன் என்பது இதற்கு முக்கிய காரணம்.

வட்டார மொழி காப்போம் வாருங்கள்

வட்டார மொழி காப்போம் வாருங்கள்

சொக்காரன்.. கோட்டிக்காரன்.., சவுத்த.., வெளிக்கி.., போன்ற சொற்கள் முறையே, பங்காளி, பைத்தியக்காரன், பிணம், மலம் போன்றவற்றை சுட்டுகிறது. இந்த வார்த்தைகள் எல்லாம் வேறு எங்குமே கேட்டறிய முடியாத நெல்லை மண்ணுக்கே உரித்தான வார்த்தைகள். இப்படி, இன்னும் அந்த மண்ணின் மைந்தர்களால் மட்டுமே உச்சரிக்கப்படும் பல வார்த்தைகள் நெல்லையை அதற்கே உரிய பெருமையோடு இயங்க வைத்துக்கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் நெல்லை என்பது வெறும் பெயர். அந்த மண்ணின் உண்மையான உச்சரிப்பும், வார்த்தைகளுமே நெல்லைக்கு உயிர். உலக தாய் மொழி தினத்தை கொண்டாடும் இன்றைய தினத்தில், வட்டார மொழிகளின் தனித்துவத்தை அழியவிடாமல் பேணிக்காக்க உறுதி ஏற்போம் வாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+