போதிய மழை இல்லை- நெல்லை விவசாயிகள் கவலை
நெல்லை: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் மழை லேசான சாரலுடன் காணாமல் போனதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சீராக பெய்யவில்லை. இதனால் நெல் உள்பட முக்கிய பயிர்கள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்பட்டன. தென் மேற்கு பருவமழையும் சரியாக பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்குமா, அல்லது அதுவும் போக்கு காட்டி விடுமா என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் முக்கிய அணைகள் நிரம்பிவிடும். ஆனால் டிசம்பர் மாதம் நெருங்கியும் பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் பிசான பருவ சாகுபடி நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதை மெய்பிக்கும் வகையில் தமிழக கடலோரத்தை குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் கடந்தபோது லேசான மழை பெய்தது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தை நெருங்குவதால் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. மழை இல்லாத காரணத்தால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்த அளவே உள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் தற்போது 92.90, சேர்வலாறு அணை நீர்மட்டம் 105.97, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 194 அடியாக ஆக உள்ளது. அதே நேரத்தில் அம்பாசமுத்திரத்தில் 11.3 மிமீ மழையும், தென்காசியில் 4.3மி.மீ, சேரன்மகாதேவியில் 11.4மி.மீ, புதூரில் 2 மிமீ மழையும் பெய்து உள்ளது.
மாவட்டத்தில் வேறு எங்கும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு குறைந்த அளவே நீர்வரத்து உள்ளதால் நீர் திறப்பும் குறைந்திருக்கிறது. இதனால் வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் கவலையில் இருக்கின்றனர் விவசாயிகள்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications