நெல்லையில் அரசுப் பொருட்காட்சி.. ஜூன் 3 ஆவது வாரத்தில் தொடங்குகிறது
நெல்லை: நெல்லையில் ஜூன் 3 ஆவது வாரத்தில் அரசு பொருட்காட்சி தொடங்குகிறது. இது தொடர்ந்து 45 நாட்கள் வரை நடக்கும்.
நெல்லை மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி ஜூன் 3 ஆவது வாரத்தில் தொடங்கி 45 நாட்கள் நடைபெறுவது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் கூறுகையில், "நெல்லையில் அரசு பொருட்காட்சி ஓவ்வொரு ஆண்டும் ஜுன் 3 ஆவது வாரத்தில் தொடங்கி 45 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டு பொருட்காட்சியில் அனைத்து அரசு துறை சார்பு நிறுவனங்கள், அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்க படங்கள், மாதிரிகள் வைக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள், மகளிர் அழகு சாதன பொருட்கள், பொழுது போக்கு ராட்டினங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்க வேண்டும். நாள்தோறும் கலையரங்குகளில் ஒவ்வொரு துறை சார்பாகவும் கல்லூரி, பல்கலைகழக மாணவ, மாணவிகளை கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் சாதனை விளக்க குறும்படங்கள் காண்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு பொருட்காட்சியில் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மேற்கொள்ள வேண்டும்.
தினமும் அரசு பொருட்காட்சி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை காண அனுமதிக்கப்படுவர். மருத்துவ குழுவும் பொருட்காட்சி மைதானத்தில் செயல்பட வேண்டும்" என்று கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications