தீவிரவாதிகள் தாக்கலாம் - மத்திய உளவு பிரிவு எச்சரிக்கையால் கூடங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு
நெல்லை: தீவிரவாத தாக்குதல் இருக்கலாம் என்று மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்ததால் கூடங்குளம், மகேந்திர கிரியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண செல்வராசன் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இலங்கையை சேர்ந்த அருண் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை, கல்பாக்கம் அணுமி் நிலையம், விசாகப்பட்டிணம், தூத்துக்குடி துறைமுகம் உள்பட பல்வேறு பகுதிகளை போட்டோ எடுத்து அதனை பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐ உளவு துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் போன் உரையாடல்களை இந்திய உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு இடைமறித்து கேட்டபோது சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடன்குளம் அணு மின் நிலையம், மகேந்திர கிரி விண்வெளி ஆய்வு நிலையம், தூத்துக்குடி துறைமுகம் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் வெளியாட்கள் நடமாட்டம் மற்றும் சந்தேகம்படியான படகுகள் குறித்து தகவல் தெரிவிக்க மீனவர்களும், கடலோர பகுதி மக்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடலோர பாதுகாப்பு குழும ஐஜி சொக்கலிங்கம் நெல்லை மாவட்ட கூடங்குளம் அணு மின் நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அங்குள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் பாகிஸ்தான், சீனாவை சேர்ந்த உளவாளிகள் ஊடுருவ வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்துள்ளது. எனவே வெளிநாட்டினர், வெளிஆட்கள் சந்தேகம் படும்படியாக நடமாடினால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கடலோர மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications