நெல்லையில் தொடர்ந்து கொட்டும் மழை- மக்கள் மகிழ்ச்சி!
நெல்லை: நெல்லையில் ஒரு வாரத்திற்கு பின்னர் பலத்த இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை படிப்படியாக உயர்ந்து கொண்டே போய் கடைசியாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குறைந்து போய் விட்டது.

இதனால் பாபநாசம் அணையின் நான்கு கால்வாய்களில் மட்டும் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நெல்லை கால்வாய், பழையக்கால்வாய், கோடகன் கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது. நெல்லை சந்திப்பு, சமாதானபுரம், விஎம் சத்திரம், என்ஜிஓ காலனி, தச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த இடி, மின்னல் காணப்பட்டது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 481 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.72 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 52.91 அடியாக உள்ளது.
குண்டாறு அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி விட்டது. அணைக்கு வரும் 1 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. கருப்பா நதி அணையில் மட்டும் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இரண்டாவது கட்ட சீசன் என வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Nellai filled with monsoon continuously. Kutralam falls filled due to the heavy rain.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications