ஒன்றரை அடி நீள அரிவாளுடன் கோர்ட்டுக்குள் புகுந்த மகாராஜன்.. மடக்கிப் பிடித்த போலீஸ்
நெல்லை: நெல்லை கோர்ட்டுக்குள் ஒன்றரை அடி நீள அரிவாளை சட்டைக்குள் மறைத்து வைத்து வந்த மகாராஜன் என்ற நபரைப் போலீஸார் மடக்கி் பிடித்துக் கைது செய்தனர்.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மகாராஜன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக நெல்லை கோர்ட்டில் ஆஜாராக வந்தார். அப்போது அவர் சட்டையின் பின்புறத்தை அடிக்கடி தடவி கொண்டே இருந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரது சட்டையை சோதனை போட்டனர். அதில் அவரது சட்டைக்குள் ஒன்றரை அடி நீளமுள்ள அரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உடனடியாக வெளியே அழைத்து சென்று அருகில் உள்ள தாலுகா போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் மகாராஜன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவர் எதற்காக அரிவாளுடன் கோர்ட்டுக்கு வந்தார். யாரையாவது பழி வாங்கும் நோக்கத்துடன் எடுத்து வந்தரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் கோர்ட்டுக்கு அரிவாளுடன் வந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications