நெல்லை: தனியாக சென்ற நர்சை பலாத்காரம் செய்ய முயற்சி
நெல்லை: நெல்லையில் இரவில் தனியாக நடந்து சென்ற நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் லட்சுமி. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆகாததால் பாளையங்கோட்டை சாந்தி நகர் அருகே உள்ள கிருபா நகரில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு 10 மணி அளவில் சாந்தி நகருக்கு பஸ்சில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கிருபா நகருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதிர்ச்சியில் உறைந்த அவர் கூச்சல் போடவே சத்தம் கேட்டு அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த இருவரும் லட்சுமியிடம் இருந்த செல்போன், பணம், மற்றும் அணிந்திருந்த நகைகளையும் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாளை குற்றப் பிரிவு போலீசார் விரைந்து வந்து லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். லட்சுமி அணிந்திருந்தது கவரிங் நகை என்பதும், செல்போன், மற்றும் பர்சில் வைத்திருந்த ரூ.200ஐ மர்ம நபர்கள் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications