மெதுவாக செல்லும் செங்கோட்டை ரயில்: அதிர்ச்சி- கோபத்தில் பயணிகள்
நெல்லை: நெல்லையிலிருந்து செங்கோட்டை வரும் ரயில் தாமதமாக வருவதால் பயணிகள் கோபத்தில் உள்ளனர்.
நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு தினமும் வேலைக்கு செல்வோரின் நலனை கரத்தில் கொண்டு 4 முறை இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் 6.45 மணிக்கும், அதன் தொடர்ச்சியாக 9.15 மணிக்கும் செங்கோட்டைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
காலை 9.15 வரும் ரயிலை சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். காலை 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் இந்த ரயிலை பிடிப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்தை அடைவது எளிதாக இருந்து வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக காலை 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படுவதாக இல்லை. இந்த ரயில் கடந்த சில நாட்களாக 9.50 மணிக்கு புறப்பட்டு செல்வதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும் குறி்ப்பிட்ட நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
பேருந்து பயணத்தில் டிக்கெட் விலை கூடுதலாக இருப்பதால் தான் பலரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களும் பிரச்சனை செய்து வருவதால் ரயில் பயணிகள் கோபத்தில் உள்ளனர்.
செங்கோட்டை ரயில் காலை 8.45 மணிக்கே நெல்லை வந்து விடும் நிலையில் சுமார் அங்கு 1 மணி நேரம் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது. காலை நேரத்தில் திருச்செந்தூரில் இருந்து பயணிகள் ரயில் 9.15 மணிக்கு வந்த பின்னர் அதன் இன்ஜினை கழற்றி பொருத்திய பிறகே செங்கோட்டை ரயில் புறப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ரயில்வே நிர்வாகம் இழப்பை சந்திக்க போகிறது என்று பயணிகள் குமுறுகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications