நெல்லை தூத்துக்குடிக்கு ஜாக்பாட்: நால்வரும் ராஜ்யசபா எம்.பிக்களாக தேர்வானது எப்படி?
நெல்லை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 4 வேட்பாளர்களும் நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்தவர்கள்.
ஒரே சமயத்தில் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு பேரும் வேட்பாளர்களாக தேர்வானது எப்படி என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் சசிகலா புஷ்பா மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சின்னத்துரை ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் கூட்டணி கட்சியினருக்காக ராதாபுரம் ,ஓட்டப்பிடாரம்,தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் இவர்கள் இருவரும் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.

சசிகலா புஷ்பா
நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பா போட்டியிடுவதாக இருந்த ராதாபுரம் தே.மு.தி.க.,வுக்கும், சின்னத்துரை போட்டியிடுவதாக இருந்த ஓட்டப்பிடாரம் புதிய தமிழகத்திற்கும் வழங்கப்பட்டது. தலைமைக்கு கட்டுப்பட்டு கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு பாடுபட்டதன் பலனாக சசிகலா புஷ்பாவை தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக தலைமை அறிவித்து இவரை வெற்றிப் பெற வைத்தது.

சின்னத்துரை
சின்னத்துரை தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த..., முன்னாள் அமைச்சரும், தப்போது திமுக எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர். அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவிற்கு தாவியபோது அவருடன் போகாமல் அதிமுகவிலேயே தாக்கு பிடித்ததால் பதவிகள் அடுத்தடுத்து தேடி வந்துள்ளளது.

அம்மாவின் விசுவாசம்
அதிமுகவில் விசுவாசமானவர்களுக்கு பதவி கிடைப்பது நிச்சயம் என்கின்றனர். அதனால்தான் சின்னத்துரைக்கு இளம்பெண், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பதவி, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பதவி தேடி வந்தது. தற்போது ராஜ்யசபா உறுப்பினர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முத்துக்கருப்பனுக்கு எப்படி?
நெல்லையைச் சேர்ந்த முத்துக்கருப்பன் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறார். கருப்பசாமி பாண்டியன் பாலியல் வழக்கில் சிக்கியபோது அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருப்பதை தெரிவித்தனர். அதன் பலனாகவே தற்போது பதவி தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜிலா சத்யானந்த்
நெல்லை மேயர் விஜிலா சத்யானந்த் கிருஸ்துவ பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் மூலம் 2005ம் ஆண்டுதான் அதிமுகவில் சேர்ந்தார். ஆங்கிலம், இந்தி சரளமாக வரும். மேயராக வெற்றி பெற்ற அவரை ராஜ்யசபா எம்.பி பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

தென்மாவட்ட வாக்கு வங்கி
மொத்தத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டும்,தென் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள தாது மணல் பிரச்சனை,கூடங்குளம் அணு உலை போராட்டம்,அதிமுகவில் உள்ள உள்கட்சி பூசல் போன்றவைகளை சமாளிக்கவும்,குறிப்பிட்ட சமூக வாக்குகள் இடம் மாறி விடக் கூடாது என்பதற்காகவும் தான் அனைத்து எம்.பி.சீட்டுக்களும் தென் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications