விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா ராஜினாமா: பெண் மேயர்கள் எண்ணிக்கை 4 ஆக குறைவு
நெல்லை: ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பாஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண் மேயர்களின் எண்ணிக்கை 6 பேரில் இருந்து 4 பேராக ஆக குறைந்துள்ளது.

10ல் 6 மேயர்கள்
சென்னை,கோவை,திருச்சி,மதுரை,சேலம்,திருப்பூர்,ஈரோடு,வேலூர்,நெல்லை,தூத்துக்குடி,ஆகிய 10 மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளது.
இதில் வேலூர்,ஈரோடு,திருப்பூர்,திருச்சி,நெல்லை,தூத்துக்குடி,ஆகிய 6 மாநகராட்சிகளில் அதிமுகவை சேர்ந்த பெண்கள் மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

ராஜ்யசபா உறுப்பினர் பதவி
நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பாஆகியோர் அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,தேர்தலுக்கான வேட்பாளர்களாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர்

மேயர் பதவி ராஜினாமா
ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே அவர்கள் வகிக்கும் உள்ளாட்சி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

விஜிலா சத்யானந்த்
மேயர் விஜிலா சத்தியானந்த் தமது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை மாநகராட்சியின் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஜெய் சேவியர் வசம் நேற்று ஒப்படைத்தார்.
இன்றுமாலை 5 மணிக்கு துணை மேயர் ஜெகநாதன் தலைமையில் நெல்லை மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் நடைப்பெருகிறது.இந்த கூட்டத்தில் மேயரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படஉள்ளது.

சசிகலா புஷ்பா ராஜினாமா
அதே போல் தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து இன்று பகல் 12.30 மணிக்கு சிறப்பு கூட்டம் துணை மேயர் சேவியர் தலைமையில் நடைபெறுகிறது.

4 பெண் மேயர்கள்
நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாநகராட்சிகளுக்கு மேயர் பதவி காலியாவதால் 6.ல் இருந்து பெண் மேயர்களின் எண்ணிக்கை 4ஆக குறைந்துள்ளது. அதே போல தமிழக்கத்தில் 4 ஆண் மேயர்கள் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications