விபத்தில் உயிரிழந்த அப்பா... எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக மகனிடம் மறைத்த தாய்!
நெல்லை: மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மனதைக் கல்லாக்கிக் கொண்டு விபத்தில் தந்தை உயிரிழந்த தகவலை மறைத்து, அவரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்துள்ளார் நெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (47), திண்டுக்கல் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், விஸ்வா என்ற மகனும் உள்ளனர். விஷ்வா தற்போது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி வருகிறார்.

பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்த முத்துகிருஷ்ணன், நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தனது மகனுக்கு தெரிய வந்தால், அவனால் தேர்வை சரிவர எழுத முடியாது என எண்ணினார் மகேஸ்வரி. எனவே, அப்பாவின் உடல்நிலை முன்னேறி வருவதாக பொய் கூறி, மருத்துவமனையில் இருந்து மகனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் முத்துகிருஷ்ணன். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, தனது மகனின் தேர்வை மனதில் கொண்டு, மனதை கல்லாக்கி இந்த விசயத்தை அவரிடமிருந்து மறைக்க முடிவு செய்தார்.
அதன்படி, விரைந்து வீட்டிற்குச் சென்ற மகேஸ்வரி மகனிடம், ‘‘அப்பா நன்றாக இருக்கிறார். ஆனால் அவருக்கு காயம்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வீட்டுக்கு நலம் விசாரிக்க வருவார்கள். இது உன்னுடைய படிப்புக்கு தொந்தரவாக இருக்கும். அதனால் அடுத்த தெருவில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு சென்று படி. இரவு அங்கேயே தங்கிவிட்டு பள்ளிக்கு செல்' என உணவு, உடை கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.
அதன்படியே விஷ்வாவும் தனது நண்பர் வீட்டில் தங்கிப் படித்து நேற்று தேர்வெழுதினார். பின்னர் வீடு திரும்பிய பின்னரே அவருக்கு, தன் தந்தை உயிரிழந்த தகவல் தெரிய வந்தது. இதனால் விஷ்வா அதிர்ச்சியடைந்தார்.
இதற்கிடையே முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான நெல்லை டவுனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விஸ்வாவும் அங்கு அழைத்து செல்லப்பட்டார்.
மகன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக, மனதை கல்லாக்கிக்கொண்டு தன்னுடைய கணவர் விபத்தில் இறந்ததை மறைத்த மகேஸ்வரியின் செயல், உறவினர்கள் உள்பட அனைவரின் நெஞ்சையும் உருக்கியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications