வீட்டில் தனியே இருந்த பியூட்டிசியன் படுகொலை
நெல்லை: நெல்லையில் பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் மும்பையில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு கோகுல்ராஜ், சோனேஸ்வரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
விஜயாவின் சகோதரி விமலா தனது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர்களது வீடு பாளை சமாதானபுரம் செழுஞ்சுடர் தெருவில் உள்ளது. இவர்களது மகள் அனிதா நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் வெளிநாட்டில் இருப்பதால் மகளை கவனித்து கொள்ள சகோதரி விஜயாவை தனது வீட்டில் தங்கியிருக்குமாறு கூறியிருக்கிறார்.
இதையடுத்து கடந்த இரண்டு மாதமாக விஜயா தனது மகன்களுடன் அங்கு தங்கியிருந்தார். விமலாவின் வீட்டு மாடியில் இவர்கள் தங்கியிருந்தனர். அவர்களுடன் அனிதாவும் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் மாலையில் கோகுல்ராஜ் வெளியே செல்வதற்காக வெளியே வந்த போது பெட்ரூமில் அவரது தாய் விஜயா அலங்கோல நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாநகர கமிஷனர் சுமித்சரண், துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணப்பெண் அலங்கார இடத்தில் அவருக்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருசிலர் மணப்பெண் அலங்காரத்துக்கு அவரது வீட்டுக்கே வந்துள்ளனர். பெரும்பாலும் அவர் பகலில் தனியாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த வீடு மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இருக்கிறது. இப்படி இருக்கையில் பகலிலேயே கொலை நடத்திருப்பது அக்கம் பக்கத்தினர் மத்தியில் பீதியை கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications