உங்க இலவசத்தை நீங்களே வச்சுக்குங்க.. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு
நெல்லை: எங்களுக்கு அரசு தரும் இலவசப் பொருட்கள் வேண்டாம். மது விலக்கை அமல்படுத்தினால் போதும் என்று கூறி இலவசப் பொருட்களுடன் பெண்கள் குவிந்ததால், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் அரசின் முக்கிய வருவாய்களில் இருந்து பொதுமக்களுக்கு இலவச நலத்திட்டங்கள வழங்கப்பட்டு வருகின்றன. இதில் டாஸ்மாக்கின் பங்கு முக்கிய இடத்தில் உள்ளது.

தற்போது பல இடங்களிலும் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்து வருகின்றன. இநத நிலையில் அரசு வழங்கிய இலவச பொருட்கள் கூட வேண்டாம், மது விலக்கு தான் வேண்டும் என்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் நடத்திய போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடம்பட்டி கிராமம். இதன சுற்றுப்புற கிராமங்களை சேர்நத சுமார் 50 பேர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை திரண்டு வந்தனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, டிவியை அரசிடம் ஓப்படைப்பதற்காக அவர்கள் கொணடு வந்திருந்தனர். அதிகாரிகளிடம் இலவச பொருட்களை அவர்கள் ஓப்படைத்தனர்.
ஆனால் அதிகாரிகள் அதை பெற்றுக் கொள்ள முடியாது என மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அதிகாரிகளின் பேச்சை ஏற்று கொள்ளாமல் கலெக்டர் அலுவலகத்திலேயே பொருட்களை வைத்து விட்டு சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மதுவிலக்கை அமுல்படுத்த கோரி
மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications